வாக்குச் சாவடி சம்பவம்.. மன்னிப்பு கேட்டார் நடிகர் விஜய்..!
வாக்குச் சாவடி சம்பவம்.. மன்னிப்பு கேட்டார் நடிகர் விஜய்..!
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளின் உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் காலை முதலே ஆர்வத்துடன் தங்கள் வாக்கை பதிவு செய்து வருகின்றனர்.
அதேபோல், அரசியல் கட்சித் தலைவர்களும், அதிகாரிகளும், அமைச்சர்களும், திரையுலக பிரபலங்களும் தங்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், நடிகர் விஜய் சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் இன்று காலை வாக்களிப்பதற்காக வந்தார்.
அப்போது, விஜய்யை பார்க்க வாக்குச் சாவடியில் ஏராளமான ரசிகர் மற்றும் பொதுமக்கள் கூடியதால் அங்கு கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால், வாக்களிப்பதற்காக வந்தவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்த விஜய் வெளியே வந்து தன்னால் ஏற்பட்ட தள்ளுமுள்ளு-க்கு அங்கு நின்றிருந்த மக்களிடம் மன்னிப்புக் கோரினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.