உண்மையை போட்டு உடைத்த பொன்னையன்.. வெளியான ஆடியோவால் கதிகலங்கி நிற்கும் ஈபிஎஸ் டிம் !!

உண்மையை போட்டு உடைத்த பொன்னையன்.. வெளியான ஆடியோவால் கதிகலங்கி நிற்கும் ஈபிஎஸ் டிம் !!

Update: 2022-07-13 06:00 GMT

அதிமுக பொதுக்குழுவில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதே நேரத்தில் அதிமுக தலைமை அலுவலகத்தில் கலவரம் ஏற்பட்டது. அதிமுக கட்சி அலுவலகத்துக்கும் பூட்டு போடும் அளவுக்கு நிலைமை சென்றுவிட்டது. 
இந்நிலையில் பொன்னையன் பேசிய ஆடியோ ஒன்று வெளியாகி அதிமுகவில் பரபரப்பை கூட்டியுள்ளது. 
எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர் பொன்னையன், ஓபிஎஸ் ஆதரவாளரான கன்னியாகுமரியை சேர்ந்த நாஞ்சில் கோலப்பனிடம் செல்போனில் பேசும் 9 நிமிட ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அதில், தொண்டர்கள் இரட்டை இலை சின்னத்தின் பக்கம் உள்ளனர். தலைவர்கள் பணத்தின் பக்கம் உள்ளனர். அவரவர் பணத்தை பாதுகாப்பதற்காக போட்டி போட்டுக் கொண்டு ஆடுகின்றனர். 
எடப்பாடி பழனிச்சாமி தமது தலைமையிலான ஆட்சி காலத்தில் அதிமுக எம்.எல்.ஏக்கள் அடித்த கொள்ளைகளை கண்டுகொள்ளவில்லை.
ஸ்டாலினுடன் தங்கமணி ரகசிய கூட்டு வைத்துள்ளார். அத்துடன் அவர் திமுக உடனும் இணக்கமாக உள்ளார். தங்கமணி அவரைக் காப்பாற்றிக் கொள்ள ஸ்டாலினிடம் ஓடுகிறார். அதேபோல் கே.பி முனுசாமி ஸ்டாலினை திட்டுவதை நிறுத்திவிட்டார். பணத்தை பாதுகாப்பதற்காக இப்படி ஆடுகிறார்கள். தளவாய் சுந்தரம் இந்தியாவிற்கே தரகர் வேலை பார்க்கின்றவர். பல கோடிகளை சுருட்டி தான் மட்டுமே வைத்துள்ளார். கே.பி.முனுசாமியை எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் ஓரங்கட்டி வைத்திருந்தனர். திமுக அமைச்சர் துரைமுருகன் சிபாரிசில் குவாரியை 20ஆண்டுகளுக்கு டெண்டர் எடுத்துள்ளார். மாதம் 2 கோடி வரை அவருக்கு வருமானம் கிடைக்கிறது. பெட்ரோல் பங்க்கும் வைத்துள்ளார்.
அதிமுக தொண்டர்கள் தடுமாறுகிறார்கள். கே.பி முனுசாமி ஒரு நக்சலைட்டாக இருந்தார். டி.ஜி.பி தேவாரம் கே.பி.முனுசாமி நக்சலைட் உடன் தொடர்பு கொண்டிருக்கிறார் என‌ ஜெயலலிதாவிடம் புகார் அளித்ததும் ஜெயலலிதா கே.பி முனுசாமியை ஒதுக்கி வைத்திருந்தார். ஜெயலலிதாவிற்கு முன்பு எம்ஜிஆரும் கே.பி முனுசாமி ஒதுக்கி வைத்திருந்தார். ஒவ்வொரு மாவட்ட செயலாளர்களும் 100 கோடி, 200 கோடி ரூபாய் வைத்துள்ளனர். 
எடப்பாடி பின்னால் சென்றால் தான் சம்பாதியத்தை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். நான் பொதுக்குழுவில் தீர்மானம் படிப்பதற்கு முன்பே சி.வி.சண்முகம் மைக் முன் பாய்ந்து தீர்மானம் ரத்து என கத்தி அனைத்தையும் கெடுத்துவிட்டார். அவர் கட்டுப்பாட்டில் அவர் சமூக எம்.எல்.ஏக்கள் 19 பேர் உள்ளனர். அவரும் சாதி அரசியல் தான் செய்கிறார்.
எடப்பாடி ஓபிஎஸ் உடன் சமாதானமாக பேச தயாராக இருந்தார். ஆனால் அவருக்கு எம்.எல்.ஏக்கள் ஆதரவு இல்லை. எடப்பாடி முதுகிலேயே எம்.எல்.ஏக்கள் குத்துகின்றனர். அதனாலேயே எம்.எல்.ஏக்கள் சொல்வதை எடப்பாடி பழனிசாமி கேட்கிறார். சி.வி சண்முகம் கையில் சாதி அடிப்படையில் 19 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். கொங்கு மண்டலத்தில் உள்ள 42 எம்.எல்.ஏக்களில் 9 எம்.எல்.ஏக்கள் மட்டுமே எடப்பாடி பக்கம் உள்ளனர்.  
ஒவ்வொரு மாவட்ட செயலாளரும் நூறு, இருநூறு கோடிக்கு சொத்துகள் குவித்துள்ளனர்.எனவே அவர்கள் சொத்துகளை பாதுகாக்க அடக்கி வாசிக்கின்றனர். 
கே.பி முனுசாமி ஒற்றைத்தலைமைக்கு வர முயற்சிக்கிறார். எடப்பாடி பழனிசாமி கொள்கையை விட்டுவிட்டு பதவிக்கு ஆசைப்பட்டு ஓடிக்கொண்டிருக்கிறார். எம்.ஜி.ஆரின் ஆன்மாவும் ஜெயலலிதா ஆன்மாவும் தான் இனி அதிமுகவை காப்பாற்ற வேண்டும்" என அந்த ஆடியோவில் பொன்னையன் பேசியதாக கருத்துகள் இடம்பெற்றுள்ளன. இந்த ஆடியோ அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
எனினும் இதனை தாம் பேசவில்லை என்று பாென்னையன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
Newstm.in

Similar News