கோவில் திருவிழாக்களில் ஆபாச நடனம்.. உயர்நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு !!

கோவில் திருவிழாக்களில் ஆபாச நடனம்.. உயர்நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு !!

Update: 2022-05-24 17:21 GMT

கோவில் நிகழ்ச்சிகளில் ஆபாச நடனம் இருந்தால் உடனடியாக காவல்துறையினர் நிறுத்தலாம் என்று நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.   

தமிழகத்தில் கோவில் திருவிழாக்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். ஒருசில இடங்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சி விதிமுறைகளை மீறி ஆபாசமாக இருக்கும். இது தொடர்பாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் புகார் எழுந்தது. ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதால் சில இடங்களில் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படுகிறது.

இந்த நிலையில், கோவில் திருவிழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்கக் கோரி 100க்கும் மேற்பட்ட மனுக்கள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி, விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் இருந்து தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்களை நீதிபதி தமிழ்செல்வி இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்டார். 

இந்த வழக்கில் நீதிபதி கூறியதாவது, ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் ஆபாச வார்த்தைகளோ, ஆபாச நடனங்களோ இருக்கக் கூடாது. அவ்வாறு இடம்பெறும் பட்சத்தில் காவல்துறையினர் உடனடியாக நிகழ்ச்சியை நிறுத்தலாம், எனத் தெரிவித்தார். எனினும் ஆடல் பாடல் நிகழ்ச்சியில் சட்ட ஒழுங்கு பேணப்பட வேண்டும். எந்த பிரச்சினையும் வராது என மனுதாரர் தரப்பில் உறுதி அளிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு நிபந்தனைகளை விதித்து, ஆடல் - பாடல் நிகழ்விற்கு அனுமதி அளித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.   

 

newstm.in

 

Similar News