முகநூலில் ஆபாச பதிவு.. கள்ளக்காதலி மீது போக்சோவில் வழக்கு..!
முகநூலில் ஆபாச பதிவு.. கள்ளக்காதலி மீது போக்சோவில் வழக்கு..!
கோவையைச் சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கு திருமணமாகி மனைவியும், 15 வயதில் மகளும் உள்ளனர். இந்நிலையில், ரமேஷுக்கு ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் உமா ரஞ்ஜினி (28) என்பவருடன் கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது.
இந்த விவகாரம் இரண்டு குடும்பத்தினருக்கும் தெரியவந்ததையடுத்து, இருவரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின்னர், உமா ரஞ்சனியும், ரமேஷும் பிரிந்தனர்.
இதனால் ஆத்திரத்தில் இருந்த உமா ரஞ்ஜினி, ரமேஷின் மனைவி மற்றும் 15 வயது மகளை ஆபாசமாகவும், அவதூறாகவும் முகநூலில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து ரமேஷ் போலீசில் புகார் அளித்தார்.
இதன் பேரில் கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசார், உமா ரஞ்ஜினி மீது தகவல் தொழில்நுட்ப சட்டம் 67a, 67b மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.