அதிமுகவில் பதவி வியூகம்... ஈபிஎஸ் அதிரடி!!
அதிமுகவில் பதவி வியூகம்... ஈபிஎஸ் அதிரடி!!
சென்னையில் வரும் 11ஆம் தேதி நடைபெறும் அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் அடிப்படை உறுப்பினர்களால் பொதுச் செயலாளரை தேர்வுசெய்வது குறித்து விவாதித்து முடிவெடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
ஜூலை 11ஆம் தேதி அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி தான் அதிமுகவின் அடுத்த பொதுச் செயலாளர் என்பதனை உறுதிப்படுத்தும் வகையில் அதிமுக உறுப்பினர்களுக்கு மூன்று பக்க கடிதம் அனுப்பப்பட்டு வருகிறது.
அதில், கழகப் பொதுக்குழு உறுப்பினர்களில் , ஐந்தில் ஒரு பகுதி எண்ணிக்கையினர் , பொதுக்குழு கூட்டத்தை , கழக சட்ட திட்ட விதி 7ன்படி உடனடியாகக் கூட்டுமாறு , 23.06.2022 அன்று நடைபெற்ற கழகப் பொதுக்குழுவில் விண்ணப்பித்ததின் அடிப்படையில் இந்தப் பொதுக்குழுவானது கூட்டப்படுகிறது.
கழகப் பொதுச் செயலாளர் பொறுப்பு குறித்து விவாதித்து முடிவெடுப்பது, கழக இடைக்கால பொதுச் செயலாளர் பொறுப்பை உருவாக்குவது, கழக இடைக்காலப் பொதுச் செயலாளரை , நடைபெற உள்ள கழகப் பொதுக்குழுவிலேயே தேர்வு செய்ய வேண்டுதல், கழகப் பொதுச் செயலாளர் தேர்தல் குறித்து அறிவிப்பு செய்ய வேண்டுதல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ள குறிப்பிடப்பட்டுள்ளது.
newstm.in