போஸ்டர் கிழிப்பு.. ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சாலை மறியல்.. ஈபிஎஸ்க்கு கண்டனம் !!

போஸ்டர் கிழிப்பு.. ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சாலை மறியல்.. ஈபிஎஸ்க்கு கண்டனம் !!

Update: 2022-06-15 17:52 GMT

எப்போதும் பரபரப்புக்கும் சலசலப்புக்கு பஞ்சம் இல்லாது அதிமுக. எந்த விவகாரத்தில் ஆலோசனை நடத்தினாலும் அங்கு கோஷ்டி மோதல் ஏற்படும். சாதாரண கூட்டத்திலேயே அனல் பறக்கும்.  ஆனால் தற்போது அதிமுகவின் அடுத்த பொதுச்செயலாளர் யார் என்ற ஒற்றைத் தலைமை விவகாரம் தற்போது பெரியளவில் வெடித்துள்ளது.

நேற்று கட்சி அலுவலகத்தில் ஆலோசனை நடத்தி ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆலோசனை நடத்தினர். ஆனால் இன்று கதையே வேறுபோன்று மாறிவிட்டது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தான் அடுத்த பொதுச்செயலாளராக வரவேண்டும் என அவரது ஆதரவாளர்கள் தமிழகம் முழுவதும் போஸ்டர் ஒட்டினர்.

இந்த நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்திற்கு வெளியே அவரது ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்த விவாதம் நடைபெற்று வரும் நிலையில் சென்னையில் ஓபிஎஸ்க்கு ஆதரவாக ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் கிழிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. 

அதாவது ஈபிஎஸ் தரப்பினர் தான் போஸ்டர்களை கிழித்ததாக அவர்கள் குற்றம்சாட்டினர். சென்னை கிரீன்வேஸ் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சாலை மறியலில் முழக்கம் எழுப்பினர். அதாவது அப்போது ஈபிஎஸ்க்கு எதிராக மோசமான வகையில் முழக்கம் எழுப்பினர். 

தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனைவரையும் கலைந்து போக செய்தனர். இதனிடையே ராமநாதாபுரம் மாவட்டம் பரமக்குடியில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கமுதி உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

newstm.in 

Similar News