பிரேம்ஜி இனி சிங்கிள் இல்லை.. பிரபல பாடகியுடன் டேட்டிங்? தீயாய் பரவும் போட்டோஸ்!
பிரேம்ஜி இனி சிங்கிள் இல்லை.. பிரபல பாடகியுடன் டேட்டிங்? தீயாய் பரவும் போட்டோஸ்!
நடிகர் பிரேம்ஜி அமரன் பிரபல பாடகி ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் போட்டோ வெளியாகியுள்ளது.
நடிகர் பிரேம்ஜி அமரன் இயக்குநர், இசையமைப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என பல முகங்களை கொண்டவர். இவர், பிரபல திரைப்பட இயக்குநர் கங்கை அமரனின் இளைய மகன், இயக்குநர் வெங்கட் பிரபுவின் சகோதரர் ஆவார். சினிமாவில் நகைச்சுவை கேரக்டர்களில் நடித்து வரும் பிரேம்ஜி, தனது அண்ணன் வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் நிச்சயம் இடம் பெற்றுவிடுவார்.
கடைசியாக வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மாநாடு படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார் பிரேம்ஜி. இசையமைப்பாளராக வேண்டும் என்று ஆசைப்பட்ட பிரேம்ஜி இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவிடம் உதவியாளராக தனது கேரியரை தொடங்கினார். தற்போது வெங்கட் பிரபுவின் ’பார்ட்டி’ மற்றும் ’ஜோம்பி’ படத்தில் இசையமைத்துள்ளார்.
42 வயதாகும் நடிகர் பிரேம்ஜிக்கு அவரது குடும்பத்தினர் கடந்த சில ஆண்டுகளாக பெண் பார்த்து வருகின்றனர். ஆனால் இதுவரை எந்தப் பெண்ணும் செட் ஆகவில்லை. இதனால் சமூக வலைதளங்களில் தன்னைத்தானே முரட்டு சிங்கிள் என கூறி கொண்டிருந்தார் பிரேம்ஜி. இந்நிலையில் நடிகர் பிரேம்ஜி பிரபல பாடகி ஒருவருடன் டேட்டிங்கில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாடகி வினைத்தா. ஆதலால் காதல் செய்வீர், கில்லாடி ஆகிய படங்களில் பணிபுரிந்துள்ளார். இந்நிலையில் வினைத்தாவும் பிரேம்ஜியும் ஒருவரை ஒருவர் காதலிப்பதாகவும் இருவரும் டேட்டிங்கில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. வினைத்தா, பிரேம்ஜியை கட்டியணைத்தப்படி இருக்கும் போட்டோவை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்
மேலும் அந்த போட்டோவுக்கு, உன் பார்வையில், நீ என்னை பிடித்துக்கொண்டிருக்கிறாய் பேபி... நான் இருட்டில் உன்னுடன் என் கைகளுக்கு இடையில் நடனமாடுகிறேன், என ரொமான்டிக்காக பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் பிரேம்ஜியை கமிட்டடா என கேட்டு வருகின்றனர். இனி ப்ளே பாய் பிரேம்ஜி இல்லை.. என்றும் பதிவிட்டு வருகின்றனர். இருவரும் நெருக்கமாக இருக்கும் போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
newstm.in