விலை போகாத ரெய்னா.. வருத்தத்தில் ரசிகர்கள்..!

விலை போகாத ரெய்னா.. வருத்தத்தில் ரசிகர்கள்..!

Update: 2022-02-14 14:20 GMT

பெங்களூருவில், நடப்பாண்டுக்கான ஐபிஎல் மெகா ஏலம்  நேற்று மற்றும் நேற்று முன்தினம் நடைபெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஏலத்தில், ஐபிஎல் போட்டியில் சிறந்த வீரராக வலம் வந்த சுரேஷ் ரெய்னா ஏலம் போகவில்லை.

ரெய்னா விலை போகாதது சென்னை அணி ரசிகர்களுக்கு மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, சுரேஷ் ரெய்னா சென்னை அணிக்காக விளையாடிய போட்டி குறித்து பல வீடியோக்களை ரசிகர்கள் பகிர்ந்து தங்களது வருத்தத்தை தெரிவித்து வந்தனர்.

இதற்கு காரணம், ஐபிஎல் போட்டி தொடங்கியதில் இருந்து சுரேஷ் ரெய்னா சென்னை அணிக்காக மட்டும் விளையாடி வந்தார். ஒரு அணி 8  வெளிநாட்டு வீரர்கள் உட்பட 25 வீரர்களை எடுக்கலாம்.

இந்நிலையில், நேற்று கடைசி நாள் ஏலம் நடைபெற்றது. சென்னை அணி 8 வெளிநாட்டு வீரர்கள் உட்பட 24 வீரர்களை எடுத்த நிலையில், கடைசியாக ஒரு இந்திய வீரரை எடுக்க வேண்டும்.

அந்த நிலையில், சென்னை அணியிடம் ரூ.3.15 கோடி இருந்தபோது மீண்டும் சுரேஷ் ரெய்னா பெயர் வந்தால் சென்னை அணி ரெய்னாவை வாங்கும் என்ற நம்பிக்கை ரசிகர்கள் மத்தியில் இருந்தது.

ஆனால், சுரேஷ் ரெய்னா பெயர் வராத நிலையில், பகத் வர்மாவை ரூ.20 லட்சத்திற்கு சென்னை அணி வாங்கியது. சுரேஷ் ரெய்னா 205 ஐபிஎல் போட்டிகளில் 5,528 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.​

Tags:    

Similar News