8 ஆண்டுகளில் ஒவ்வொரு குடும்பத்திடமிருந்தும் 100000 ரூபாய் வரி வசூலித்த பிரதமர் மோடி!

8 ஆண்டுகளில் ஒவ்வொரு குடும்பத்திடமிருந்தும் 100000 ரூபாய் வரி வசூலித்த பிரதமர் மோடி!

Update: 2022-04-04 05:00 GMT

5 மாநிலத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு கடந்த 12 நாட்களில் 10 நாட்கள் நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. கச்சா எண்ணெய் விலை சரியத் தொடங்கிய நிலையிலும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை ஏறுமுகமாக உள்ளது. எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் பாஜக தலைவர்களும் பாஜக ஆதரவாளர்களும் மௌனம் சாதித்து வருகின்றனர்.

இந்நிலையில்,  “ஒன்றிய அரசு கடந்த எட்டு ஆண்டுகளில் 26 லட்சத்து 51 ஆயிரத்து 919 கோடி ரூபாய்களை பெட்ரோல், டீசல் வரியாக வசூலித்துள்ளது. இந்தியாவில் சுமார் 26 கோடி குடும்பங்கள் உள்ளார்கள். அந்த அடிப்படையில் ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் சராசரியாக ஒரு லட்சம் ரூபாய் பெட்ரோல், டீசல் வரி வசூலித்துள்ளது ஒன்றிய அரசு.

இதற்கு பிரதிபலனாக உங்களுக்கு என்ன செய்துள்ளது இந்த அரசு என்று உங்களை நீங்களே கேட்டுப் பாருங்கள்” என்று கேட்டுள்ளார் முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் ப.சிதம்பரம்


 

Tags:    

Similar News