'கார்கில் விஜய் திவாஸ்' தாய் நாட்டின் பெருமை - பிரதமர் மோடி..!!

'கார்கில் விஜய் திவாஸ்' தாய் நாட்டின் பெருமை - பிரதமர் மோடி..!!;

Update: 2022-07-26 11:31 GMT

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னை கார்கில் விஷயத்தில் போராக உருவெடுத்தது. இந்தியா வசம் இருந்த கார்கில் பகுதியை யாரும் இல்லாத நேரம் பார்த்து, முறைகேடாக பாகிஸ்தான் கைப்பற்றியது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் மூண்டது. மூன்று மாதங்களாக நடைபெற்ற இந்த போரில், பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு இந்தியா வெற்றி பெற்றது. 1999 ஜூலை 26ம் நாள் கார்கில் வெற்றி தினமாக அறிவிக்கப்பது. இந்தியாவை பொறுத்தவரை இந்த நாள் சாதாரண நாள் அல்ல. இந்திய ராணுவத்தின் வலிமையை இந்த உலகிற்கு உணர்த்திய நாள். அந்த நாளில் உலக நாடுகள்மத்தியில் இந்தியாவுக்கென ஒரு தனி மதிப்பு, அங்கீகாரம் கிடைத்தது என்றே கூறலாம். 

கார்கில் போரில் உயிர் நீத்த வீரர்கள் நினைவாக அப்பகுதியில் நினைவுச்சின்னம் ஏற்படுத்தப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் அப்பகுதியில் மூன்று நாட்கள் விழாவாக கொண்டாடப்படுகிறது. போரில் நாட்டுக்காக உயிரை தியாகம் செய்த 527 இந்திய வீரர்களுக்கு சிறப்பு மரியாதை செலுத்தப்படுகிறது. மேலும், இந்த போரில் பங்கேற்ற மூத்த வீரர்களுக்கும் மரியாதை செலுத்தப்படுகிறது. இந்த சமயத்தில்  பொதுமக்களும் அதிகமாக இப்பகுதிக்கு வருகின்றனர். 

கார்கில் விஜய் திவாஸை முன்னிட்டு, தாய்நாட்டின் பாதுகாப்பில் வீரத்தின் உச்சத்தை எட்டிய துணிச்சலான மகன்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 'கார்கில் விஜய் திவாஸ்' தாய் நாட்டின் பெருமை மற்றும் புகழின் சின்னம். மேலும், இந்தச் சந்தர்ப்பத்தில், தாய்நாட்டைப் பாதுகாப்பதில் வீரத்தின் உச்சத்தை வெளிப்படுத்திய நாட்டின் அனைத்து துணிச்சலான மகன்களுக்கும் எனது வணக்கம். ஜெய் ஹிந்த். என பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.



 

newstm.in

Tags:    

Similar News