வரும் மே 2 முதல் மே 4 வரை பிரதமர் மோடி வெளிநாடு பயணம்..!!

வரும் மே 2 முதல் மே 4 வரை பிரதமர் மோடி வெளிநாடு பயணம்..!!

Update: 2022-04-28 04:55 GMT

பிரதமர் நரேந்திர மோடி மே 2 முதல் 4 வரை ஜெர்மனி, டென்மார்க் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு இடையே பயணம் மேற்கொள்கிறார்.

மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “2022 ஆம் ஆண்டில் பிரதமர் மோடி பயணத்தின்போது, பெர்லினில் பிரதமர் மோடி ஜெர்மனியின் அதிபர் ஓலாஃப் ஷோல்ஸுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார். மேலும், இந்த 2 தலைவர்களும் இந்தியா-ஜெர்மனி அரசுகளுக்கிடையேயான ஆலோசனைகளின் (ஐஜிசி) 6வது பதிப்பிற்கு இணைத் தலைவராக இருப்பார்கள்.

அதன்பிறகு டென்மார்க் பிரதமர் மெட்டே பிரடெரிக்சனின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி கோபன்ஹேகனுக்குச் செல்கிறார். அப்போது டென்மார்க் அரசு நடத்தும் 2வது இந்தியா-நார்டிக் உச்சி மாநாட்டிலும் அவர் பங்கேற்கிறார். இறுதியாக மே 4 ஆம் தேதி பிற்பகலில் இந்தியா திரும்பும் பயணத்தின் போது பாரிஸ் செல்லும் பிரதமர் மோடி பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனை சந்திப்பார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags:    

Similar News