மே 26-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி வரும் மே 26ஆம் தேதி தமிழகம் வர இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. இதையொட்டி சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெறும் விழாவில் பிரதமர் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. தெற்கு ரயில்வேயின் புதிய திட்டங்களை காணொலி வாயிலாகவும் தொடங்கி வைக்கவுள்ளார்

பிரதமரின் மோடியின் வருகையையட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்க உள்ளார். இவர்கள் தங்களது சந்திப்பில் இலங்கை விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சிகைகள் குறித்து விவாதிப்பார்கள் என்று தெரிகிறது.

நீட் தேர்வுக்கு விலக்கு கோரிய சட்ட மசோதாவை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்துள்ளார். அது குறித்தும் பிரதமர் மோடியிடம், முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடுவார் என்று கூறப்படுகிறது.மேலும் தமிழகத்திற்கு தேவையான பல்வேறு திட்டங்கள் குறித்து பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைக்கவும் இருப்பதாக செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.