பிரதமர் ராஜபக்ச பதவி விலகவில்லை – இலங்கை விளக்கம்!!
பிரதமர் ராஜபக்ச பதவி விலகவில்லை – இலங்கை விளக்கம்!!
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. அங்கு நிலவும் பொருளாதார சிக்கலால் கடந்த சில மாதங்களாக அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
பெரும்பாலான அத்தியாவசிய பொருட்களை இலங்கை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வருகிறது. எரிபொருட்கள் பற்றாக்குறையால் தினமும் 13 மணி நேரம் மின் தடை ஏற்பட்டுள்ளது.
இதனால், பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் கொழும்புவில் அதிபர் கோத்தபய ராஜபக்ச வீட்டை முற்றுகையிட்டனர். பொதுமக்கள் போராட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் அந்நாட்டில் அவசர நிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் போராட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக சமூக வலைதளங்களும் முடக்கப்பட்டன.
இதனையடுத்து, எழுந்த கடும் எதிர்ப்பின் காரணமாக சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன. இந்நிலையில், இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச ராஜினாமா செய்தார் என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
ராஜபக்ச அளித்த ராஜினாமா கடிதத்தை கோத்தபய ராஜபக்ச ஏற்கவில்லை என்று செய்திகள் வெளியாகின. இந்தநிலையில், இலங்கை பிரதமர் பதவியிலிருந்து மகிந்த ராஜபக்ச ராஜினாமா செய்ததாக வெளியான செய்திகள் தவறானது அரசின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
newstm.in