தாம்பத்ய உறவில் ஈடுபட கைதிக்கு 15 நாள் பரோல்.. ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!
தாம்பத்ய உறவில் ஈடுபட கைதிக்கு 15 நாள் பரோல்.. ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் நகரைச் சேர்ந்தவர் நந்தலால். கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இவருக்கு கோர்ட் ஆயுள் தண்டனை விதித்தது.
இதையடுத்து அவர் கடந்த சில ஆண்டுகளாக சிறையில் உள்ளார். நந்தலாலுக்கு திருமணமாகி ரேகா என்ற மனைவி உள்ளார்.
இந்நிலையில், கணவருடன் தாம்பத்ய உறவில் ஈடுபடவும், அதன் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளவும் அவரை பரோலில் விடுவிக்க வேண்டும் என நந்தலாலின் மனைவி ராஜஸ்தான் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த ராஜஸ்தான் ஐகோர்ட், சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதியின் மனைவிக்கு குழந்தை பெற்றுக் கொள்ள உரிமை உள்ளது. அவர் எந்த குற்றங்களையும் செய்யவில்லை.
மேலும், தண்டனை பெற்ற குற்றவாளியை மனைவியுடன் குழந்தை பெற்றெடுக்க தாம்பத்ய உறவில் ஈடுபட விடாமல் தடுப்பது அந்த மனைவியின் உரிமையை மோசமாக பாதிக்கும்’ எனக் கூறி, மனைவியுடன் தாம்பத்ய உறவில் ஈடுபட கைதி நந்தலாலுக்கு 15 நாட்கள் பரோல் வழங்கி உத்தரவிட்டது.