கைதியின் உறவினர் கையில் துப்பாக்கி.. அஜாக்கிரதை காவலர்கள் சஸ்பெண்ட்..!

கைதியின் உறவினர் கையில் துப்பாக்கி.. அஜாக்கிரதை காவலர்கள் சஸ்பெண்ட்..!

Update: 2022-05-13 10:57 GMT

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியைச் சேர்ந்த அன்பரசன், ஆறுமுக வேல் ஆகிய இருவரும் இருக்கன்குடி காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகின்றனர்.

இவர்கள், சில நாட்களுக்கு முன்பு விருதுநகர் கிளைச் சிறையில் இருந்து ஜான்பாண்டியன் என்ற கைதியை அழைத்துக் கொண்டு துப்பாக்கியுடன் விருதுநகர் நீதிமன்றத்திற்கு சென்றனர்.

விருதுநகர் நீதிமன்றத்தில் கைதியை ஆஜர்படுத்தி விட்டு, அருகில் உள்ள டீக்கடையில் இரண்டு காவலர்களும் டீ குடிக்கச் சென்றனர்.

அப்போது, அங்கு வந்த ஜான்பாண்டியனின் உறவினர் ஒருவரிடம் இரண்டு காவலர்களும் துப்பாக்கியை கொடுத்து விட்டு டீ குடித்துள்ளனர்.

இந்நிலையில், ஜான் பாண்டியனின் உறவினர் ஒருவர் போலீஸ் துப்பாக்கியுடன் தன்னை புகைப்படம் எடுத்து அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டதால் சர்ச்சை ஏற்பட்டது.

இதையடுத்து விருதுநகர் மாவட்ட எஸ்பி மனோகரன் விசாரணை நடத்தி, வெளியாட்களிடம் காவலர் துப்பாக்கியை கொடுத்து அஜாக்கிரதையாக நடந்து கொண்டதற்காக அன்பரசன் மற்றும் ஆறுமுகம் வேல் ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

Similar News