#BIG NEWS:- தனியார் டிவி சேனல்களுக்கு தடை.. மத்திய அமைச்சர் முருகன் விளக்கம்..!
#BIG NEWS:- தனியார் டிவி சேனல்களுக்கு தடை.. மத்திய அமைச்சர் முருகன் விளக்கம்..!
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் விதமான உள்ளடக்கத்தை ஒளிபரப்பும் தனியார் 'டிவி' சேனல்களின் ஒளிபரப்பு உரிமத்தை மத்திய அரசு ரத்து செய்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
இது தொடர்பாக, லோக்சபாவில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் பதில் அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: “புதிய ஒளிபரப்பு உரிமம் கோரியும், பழைய உரிமத்தை புதுப்பிக்க வேண்டியும் வரும் தனியார் 'டிவி' நிறுவனத்தின் விண்ணப்பங்களை மத்திய உள்துறை தீவிரமாக பரிசோதிக்கிறது.
விண்ணப்பித்துள்ள 'டிவி சேனல்களின்' நடவடிக்கை தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிப்பதாக தெரியவந்தால், பாதுகாப்பு அனுமதியை உள்துறை அமைச்சகம் நிறுத்தி வைக்கிறது.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட, 'டிவி’ சேனலுக்கு தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தால் வழங்கப்பட்ட உரிமம் தன்னிச்சையாக ரத்தாகிறது.
‘டிவி’ சேனல்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு முன், உரிய நடைமுறைகள் பின்பற்றப்படுகிறதா..? என்று சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது.
அவர்கள் அளிக்கும் விளக்கம் திருப்திகரமாக இல்லாதபோது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தேசிய பாதுகாப்பு விவகாரத்தில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை” என்று அவர் கூறினார்.