தனியார் பள்ளி பஸ் வயலில் கவிழ்ந்தது.. 5 மாணவ - மாணவியர் காயம்..!

தனியார் பள்ளி பஸ் வயலில் கவிழ்ந்தது.. 5 மாணவ - மாணவியர் காயம்..!

Update: 2022-07-08 05:35 GMT

கடலூர் மாவட்டம் பாசார் அருகே, தனியார் மேல்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில், ஆயிரத்திற்கு அதிகமான மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர்.

இந்தப் பள்ளியில் இன்று 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ - மாணவியருக்கு சிறப்பு வகுப்பு நடைபெறுவதால் காலை 8 மணிக்கு நிதிநத்தம், குமாரை, பெருமுளை, சிறுமுளை ஆகிய பகுதிகளில் இருந்து 20-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியரை ஏற்றிக்கொண்டு பள்ளிக்கு சொந்தமான பஸ் வந்து கொண்டிருந்தது.

இந்த பஸ்சை, முத்தழகன் ரவிச்சந்திரன்(30) என்பவர் ஓட்டி வந்தார். கனகம்பாடி பேருந்து நிறுத்தம் அருகே பஸ் வந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள வயலில் கவிழ்ந்தது.

இந்த விபத்தைக் கண்ட அப்பகுதி மக்கள் ஓடிவந்து, பஸ்சுக்குள் சிக்கியிருந்த மாணவர் - மாணவியரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் 5 மாணவ - மாணவியருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News