சமூக வலைதளங்களில் வெளியான அந்தரங்க வீடியோ… இளைஞர் உயிரிழப்பு!!

சமூக வலைதளங்களில் வெளியான அந்தரங்க வீடியோ… இளைஞர் உயிரிழப்பு!!

Update: 2022-03-27 10:29 GMT

கர்நாடகா மாநிலம் தாளவாடி அருகே மெட்டல்வாடி கிராமத்தை சேர்ந்த பசுவண்ணா (35) அதே பகுதியில் பெட்டிக்கடை  நடத்தி வந்தார். திருமணம் ஆகாத இவர் தனியாக வசித்து வந்தார்.

பசுவண்ணாவுக்கு அதே பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது .அதனால் அந்த பெண்ணுடன் அடிக்கடி ரகசியமாக உறவு கொண்டு வந்துள்ளார்.

இதை தெரிந்து கொண்ட மர்ம நபர்கள், அவர் அப்பெண்ணுடன் தனிமையில் இருப்பதை வீடியோ எடுத்து சமூக ஊடகத்தில் வெளியிட்டனர். அந்த வீடியோ காட்சி அந்த ஊர் மக்களிடம் வைரலானது.

இதனால் பசுவன்னா மிகவும் மன உளைச்சலில் சில நாட்களாக இருந்து வந்தார். இந்நிலையில் அவர் தோட்டத்தில்  தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் கொடுத்ததும் சம்பவ இடத்திற்கு  வந்து போலீசார் பசுவண்ணாவின் உடலை  கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர் .

அப்போது அவரின் உடலில் காயங்கள் இருப்பதால் அவர் தற்கொலை செய்து கொண்டாரா, அல்லது யாராவது கொலை செய்து விட்டனரா என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

newstm.in

Similar News