குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் சிக்கல்!?
குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் சிக்கல்!?
டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் சிக்கல்களை சந்திப்பதாக தேர்வர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் ஊழியர்கள், அலுவலர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த ஆண்டு மொத்தம் 5,831 காலிப் பணியிடங்களுக்கு குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வும், 5,255 காலிப் பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வும் நடைபெற உள்ளது.
இதில்,குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகள் மே 21ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்வு முடிவுகள் ஜூன் 5ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. தமிழகம் முழுவதும் 117 மையங்களில் இந்த தேர்வுகள் நடைபெற உள்ளன.
குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கு இன்றே கடைசி நாள். இந்த நிலையில், விண்ணப்பிப்பதில் சிக்கல்களை சந்திப்பதாக தேர்வர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம் வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சிறைத்துறை நன்னடத்தை அலுவலர், தொழிலாளர் துறை உதவி ஆய்வாளர், சார் பதிவாளர், சிறப்பு உதவியாளர், தனி பிரிவு உதவியாளர், நகராட்சி ஆணையர், உதவிப் பிரிவு அலுவலர், முழு நேர விடுதி காப்பாளர், முழுநிலை ஆய்வாளர், தணிக்கை ஆய்வாளர், வருவாய் உதவியாளர், கைத்தறி ஆய்வாளர் போன்ற பதவியிடங்களுக்கு தேர்வு நடைபெறவுள்ளது.
newstm.in