தமிழகத்தில் இன்டர்ன்ஷிப் பெறுவதில் சிக்கல்.. அமைச்சர் மா.சுப்பிரமணியம் தகவல்..!

தமிழகத்தில் இன்டர்ன்ஷிப் பெறுவதில் சிக்கல்.. அமைச்சர் மா.சுப்பிரமணியம் தகவல்..!

Update: 2022-04-20 05:25 GMT

தமிழக சட்டப்பேரவையில் இன்றைய கவன ஈர்ப்பு தீர்மானத்தின் போது பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “சீனா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட வெளிநாடுகளில் படித்த மருத்துவ மாணவர்கள் இன்டர்ன்ஷிப் பெறுவதில் சிக்கல் இருக்கிறது.

அவர்கள் ஆறு மாத காலம் ஆன்லைனில் படித்ததால் உச்ச நீதிமன்றம் தடை ஆணை பிறப்பித்துள்ளது. இருந்த போதிலும், மத்திய அரசு கடந்த நவம்பர் மாதம் வெளிநாடுகளில் படித்த மாணவர்கள் இங்கே மருத்துவக் கல்லூரிகளில் இன்டர்ன்ஷிப் பெறுவதை 10 சதவீதத்திலிருந்து 7 .5 சதவீதமாக குறைந்துள்ளது.

அதை 20% ஆக உயர்த்துவதற்கும், ஆன்லைனில் வெளிநாட்டில் படித்த மாணவர்கள் இன்டர்ன்ஷிப் பெறுவதற்கும் உரிய நடவடிக்கையை தமிழக முதல்வர்  கண்டிப்பாக எடுப்பார்” என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Similar News