‘பீஸ்ட்’ படம் வெளியாவதில் சிக்கல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள் - இதுதான் காரணம் !!
‘பீஸ்ட்’ படம் வெளியாவதில் சிக்கல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள் - இதுதான் காரணம் !!
நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படம் கரூரில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
எதிர்பார்ப்பை எகிற செய்துள்ள விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள ‘பீஸ்ட்’ வரும் நாளை வெளியாகிறது. தமிழகம் முழுவதும் அவரது ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் காத்திருக்கின்றனர். அதிகாலை நான்கு மணிக்கே காட்சிகள் தொடங்குவதால் திரையரங்குகள் தயார் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கரூரில் மூன்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் பீஸ்ட் படம் வெளியாகும் என்று செய்தித்தாள்களில் விளம்பரம் வெளியானது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தனர். இந்த நிலையில், தற்போது வரை விநியோகஸ்தர்களிடம் கரூர் திரையரங்க உரிமையாளர்கள் ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை என்று கூறப்படுகிறது.
இதன் காரணமாக கரூர் மாநகரில் ’பீஸ்ட்’ படம் வெளியாவதில் சிக்கல் நீடித்து வருகிறது. இதனை அறிந்த விஜய் ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர். அதேநேரத்தில் கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி மற்றும் குளித்தலையில் நாளை திரையிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ’அரபிக்குத்து’, ‘ஜாலியோ ஜிம்கானா’ பாடல்கள் வைரல் ஹிட் அடித்துள்ளன. தமிழில் இப்படத்தினை, உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸும் தெலுங்கில் ’விஜய் 66’ தயாரிப்பாளர் தில் ராஜுவும் கைப்பற்றியுள்ளனர்.
We could not get Beast movie to release in karurcinemas. Sorry for the inconvenience and thanks for understanding.
— Karur Cinemas (@KarurCinemas) April 12, 2022
newstm.in