என்னை தயாரிப்பாளர் மிரட்டுகிறார் – நடிகர் விமல் பரபரப்பு புகார்!!

என்னை தயாரிப்பாளர் மிரட்டுகிறார் – நடிகர் விமல் பரபரப்பு புகார்!!

Update: 2022-04-21 06:45 GMT

தயாரிப்பாளர் சிங்காரவேலன் போலி ஆவணங்கள் மூலம் தன்னுடைய பட தயாரிப்பாளர்களை பணம் கேட்டு மிரட்டுவதாக நடிகர் விமல் சென்னை காவல் ஆணையரகத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

நடிகர் விமல் 5 கோடி ரூபாய் பண மோசடி செய்ததாக தயாரிப்பாளர் கோபி என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். மன்னர் வகையறா படத்திற்காக பணம் வாங்கிக்கொண்டு திருப்பித்தராமல் மோசடி செய்ததாக அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த புகாருக்கு விளக்கமளிக்கும் வகையில் நடிகர் விமல் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தயாரிப்பாளர் கோபி கொடுத்த புகாரை விசாரிக்கும் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தார். மேலும் தன்னை மோசடி செய்யும் சிங்காரவேலன் என்ற தயாரிப்பாளர் குறித்தும் புகார் அளித்துள்ளார்.

சிங்காரவேலன் என்ற தயாரிப்பாளர் தன் பெயர் மற்றும் ஆவணங்களைப் பயன்படுத்தி தயாரிப்பு நிறுவனம் ஒன்றை உருவாக்கி மோசடி செய்துள்ளார். மன்னர் வகையறா படத்திற்காக பணத்தை கடனாகப் பெற்று, படத்தை விற்பனை செய்துவரும் பணத்தையும் முறையாக கணக்கு காட்டாமல் சிங்காரவேலன் மற்றும் அவரது நண்பர்கள் மோசடி செய்துவிட்டனர்.

இது தொடர்பாக விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் உரிய ஆதாரங்களுடன் புகார் அளிக்கப்பட்டு வழக்குப்பதிவும் செய்யப்பட்டிருக்கிறது. சிங்காரவேலன், கோபி மற்றும் அவரது நண்பர்கள் என்னிடம் எந்தவித பண பரிவர்த்தனையும் வைத்துக் கொள்ளவில்லை என்பது தொடர்பான ஆவணங்களையும் காவல்துறையினரிடம் கொடுத்துள்ளேன்.

நான் நடித்தவிலங்குஎன்ற வெப்சீரிஸ் தயாரிப்பாளரிடம் போலி ஆவணங்களை வைத்து சிங்காரவேலன் பணம் கேட்டு மிரட்டியதாக புதிய புகார் ஒன்றைத்தான் காவல் ஆணையரிடம் கொடுத்துள்ளேன். யார் மோசடி செய்து உள்ளார்கள் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்று நடிகர் விமல் கூறினார்.

newstm.in

Similar News