பணி நேரத்தில் செல்போன் பயன்படுத்த தடை.. ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

பணி நேரத்தில் செல்போன் பயன்படுத்த தடை.. ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

Update: 2022-03-15 12:17 GMT

அரசு ஊழியர்கள் பணி நேரத்தில் சொந்த வேலைக்காக செல்போன் பயன்படுத்த தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

அத்துடன், பணி நேரத்தில் அரசு ஊழியர்கள் செல்போன் பயன்படுத்துவது பற்றி விதிமுறைகளை வகுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த விதிமுறைகளை பின்பற்றாத அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.

Similar News