தமிழகத்தில் இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு வருகிறது தடை காலம்..!

தமிழகத்தில் இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு வருகிறது தடை காலம்..!

Update: 2022-06-14 10:21 GMT

தமிழகத்தில், ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ம் தேதி முதல் ஜூன் 14-ம் தேதி வரையிலான 61 நாட்கள் மீன்களின் இனப்பெருக்க காலமாக கருதி விசைப்படகு மூலம் கடலுக்குள் சென்று மீன்பிடிக்க தமிழக அரசால் தடை விதிக்கப்படும்.

அதேபோல், இந்த ஆண்டும் கடந்த ஏப்ரல் 15-ம் தேதி முதல் விசைப்படகு மூலம் கடலுக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் தங்கள் படகுகளை கரையில் நிறுத்தி வைத்தனர். இந்த தடை காலத்தில் மீனவர்கள் தங்கள் படகுகளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் இன்று (14-ம் தேதி) நள்ளிரவு 12 மணியுடன் விசைப்படகுகளின் மீன்பிடி தடை காலம் முடிவடைய உள்ளது. இதையடுத்து மீனவர்கள் மீண்டும் கடலுக்கு செல்ல ஆயத்தமாகி வருகின்றனர்.

மீன் பிடிக்க தேவையான வலை போன்ற உபகரணங்களை படகுகளில் ஏற்றும் பணியில் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Similar News