ஊர்வலத்திற்கு தடை விதிக்க வேண்டும்.. அரசுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

ஊர்வலத்திற்கு தடை விதிக்க வேண்டும்.. அரசுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

Update: 2022-03-04 14:45 GMT

மேகதாதுவில் அணை கட்ட வலியுறுத்தி காங்கிரஸ் நடத்தி வரும் பாதயாத்திரையால் பெங்களூரு நகரில் பல்வேறு சாலைகளில் கடந்த 3 நாட்களாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் பரிதவித்தனர்.

இதுகுறித்து கர்நாடக ஐகோர்ட்டில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணை ஐகோர்ட் தலைமை நீதிதிபதி ரிதுராஜ் அவஸ்தி, நீதிபதி கிருஷ்ணகுமார் முன்னிலையில் நேற்று நடைபெற்றது.

அப்போது, பெங்களூருவில் நடந்து வரும் பாதயாத்திரையால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மேக்கரி சர்க்கிளில் போக்குவரத்து நெரிசல் உண்டானதால் நீதிபதிகளே ஒரு மணி நேரம் நெரிசலில் சிக்கி கோர்ட்டுக்கு தாமதமாக வந்துள்ளனர்.

அப்படி இருக்கும்போது சாதாரண மக்கள் என்ன செய்வார்கள். தினமும் வேலை செய்தும், சரியான நேரத்திற்கு வேலைக்கு செல்லும் நபர்களின் நிலை என்னவாகும் என்று தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி, அரசு வக்கீலிடம் கேள்வி எழுப்பினார்.

மேலும், காங்கிரஸ் நடத்திய பாதயாத்திரையால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி இருப்பதால், பெங்களூருவில் போராட்டம், ஊர்வலம் நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று அரசுக்கு, தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி மற்றும் நீதிபதி கிருஷ்ணகுமார் உத்தரவு பிறப்பித்தனர்.

Similar News