நீடிக்கும் பதற்றம்.. மத்திய அமைச்சர் கார் மீது கல்வீச்சு !!
நீடிக்கும் பதற்றம்.. மத்திய அமைச்சர் கார் மீது கல்வீச்சு !!
விழாவில் பங்கேற்க சென்ற மத்திய பாஜக அமைச்ர் சுபாஷ் சர்க்காரின் கார் மீது சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
குஜராத், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் ராம நவமி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. எனினும் இந்த மாநிலங்களில் பல இடங்களில் ராம நவமி விழாவில் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளன. கல்வீச்சு சம்பவங்கள் அரங்கேறின.
இந்த நிலையில், மேற்கு வங்கத்தில் மத்திய அமைச்சர் சுபாஷ் சர்க்கார் பங்குராவிற்கு சென்றுள்ளார். அங்கு அவரது கார் மீது மர்ம கும்பல் கற்களை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் அதிர்ஷ்டவசமாக அமைச்சர் உயிர்தப்பினார். இதனையடுத்து காவல்துறையினர் அவரை பாதுகாப்புடன் அழைத்துதச்சென்றனர்.
இதுகுறித்து மத்திய அமைச்சர் சுபாஷ் சர்க்கார் கூறுகையில், எனது கார் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவமானது, முற்றிலும் அரசியல் உள்நோக்கம் கொண்டது. கற்களை வீசி தாக்குதல் நடத்திய நபர்களை அடையாளம் கண்டு போலீசார் கைது செய்ய வேண்டும், என்றார்.
இதுகுறித்து பாஜக எம்எல்ஏவும், மேற்குவங்க எதிர்க்கட்சி தலைவருமான சுவேந்து அதிகாரி வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ஹவுரா மாவட்டத்தின் ஷிவ்பூர் பகுதியில் ராம பக்தர்கள் மீது தாக்குதல் நடந்துள்ளது. போலீசார் நடத்திய தடியடியில் மக்கள் சிலர் காயமடைந்தனர். மேற்குவங்கத்தில் மக்களின் வழிபாட்டு முறைகள் தடை செய்யப்பட்டுள்ளதா?, என்று கேட்டுள்ளார்.
Ram Bhakts aren't safe in WB. Howrah Police Commissionerate personnel thrashed participants of a Ram Navami procession at Shibpur. Many got injured.
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) April 10, 2022
Can't Sanatani devotees practice their religion in this State safely?@HMOIndia@jdhankhar1@HomeBengal
DGP @WBPolice@chief_west pic.twitter.com/X6KVq1hKBP
newstm.in