வாடகைக்கு கட்டிடம் எடுத்து விபச்சாரம்.. 2 பேர் கைது.. தம்பதி உட்பட 3 பேருக்கு வலை..!

வாடகைக்கு கட்டிடம் எடுத்து விபச்சாரம்.. 2 பேர் கைது.. தம்பதி உட்பட 3 பேருக்கு வலை..!

Update: 2022-05-27 05:20 GMT

புதுச்சேரியில் அழகு நிலையங்கள் மற்றும் மசாஜ் சென்டர்களில் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு புகாா் வந்தது. இதையடுத்து அழகு நிலையங்கள், மசாஜ் சென்டர்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில், பல்வேறு அழகு நிலையங்களில் விபச்சாரம் நடப்பது உறுதி செய்யப்பட்டது.

அங்கு விபச்சாரத்தில் ஈடுபடுத்தபட்ட பெண்களை மீட்ட போலீசார் விபச்சார மையங்களுக்கும் சீல் வைத்தனர். மேலும், நகராட்சி மூலம் அழகு நிலையங்களுக்கான உரிமமும் ரத்து செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு கட்டடத்தில் அழகு நிலையம் என்ற பெயரில் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து கோரிமேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் மற்றும் போலீசார் அங்கு அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, அங்கு விபச்சாரம் நடப்பது உறுதியானது.

இதைத்தொடர்ந்து அந்த அழகு நிலையத்தின் மேலாளரான ஜோலார்பேட்டை தாலுகா சோலையூரை சேர்ந்த மகி (32), புரோக்கராக செயல்பட்ட கள்ளக்குறிச்சியை சேர்ந்த தூயநெஞ்சன் (21) ஆகியோரை கைது செய்தனர். அங்கிருந்த 3 அழகிகளும் மீட்கப்பட்டனர்.

மேலும், புரோக்கர்களாக செயல்பட்ட வைத்திக்குப்பம் சிவராஜா, அவரது மனைவி ரம்யா, கட்டடத்தை வாடகைக்கு விட்ட புதுசாரம் லட்சுமி நகரை சேர்ந்த கணேசன் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

Similar News