காதலர் தினத்திற்கு எதிர்ப்பு.. நாய்களுக்கு திருமணம் செய்து வைத்த இந்து அமைப்பினர்..!
காதலர் தினத்திற்கு எதிர்ப்பு.. நாய்களுக்கு திருமணம் செய்து வைத்த இந்து அமைப்பினர்..!
உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவில் இந்து முன்னணி, பஜ்ரங் தள் உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
சில அமைப்புகள் கையில் தாலியுடன் சென்று காதலர்களை திருமணம் செய்துகொள்ளும்படி கட்டாயப்படுத்துகின்றனர். சில அமைப்புகள் வன்முறையில் ஈடுபட்டு, காதலர்கள் மீது தாக்குதல்களும் நடத்துகின்றனர்.
இந்நிலையில், நெல்லை மாவட்டம் பிராஞ்சேரி பகுதியில் உள்ள இந்து அமைப்பினர் சிலர் காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலையில் கூடினர்.
பின்னர், இரண்டு நாய்களை பிடித்து அதன் கழுத்தில் மாலை போட்டு திருமணம் செய்து வைப்பதாக கூறி வீடியோ வெளியிட்டுள்ளனர். அது தொடர்பான வீடியோக்களும், புகைப்படங்களும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.