பொதுமக்கள் குஷி..!! ரேஷன் கடைகளில் இனி இது தேவையில்லையாம்..!!

பொதுமக்கள் குஷி..!! ரேஷன் கடைகளில் இனி இது தேவையில்லையாம்..!!

Update: 2022-03-18 06:05 GMT

தமிழ்நாட்டில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் அரிசி, பருப்பு, கோதுமை உள்ளிட்ட பொருள்களை ரேஷன் கடைகளில் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். மலிவு விலையில் கிடைக்கும் இந்த பொருட்களால், எத்தனையோ குடும்பங்கள் நன்மை அடைந்து வருகின்றன. வாழ்வாதாரத்துக்கு அடிப்படையாக இருந்து வருகின்றன.
 
மற்றொருபக்கம் ரேஷன் விநியோகிப்பதில் பல்வேறு முறைகளை அரசு கையாண்டு வருகிறது. அதில் ஒன்றுதான் பயோமெட்ரிக் முறையாகும். ஸ்மார்ட் கார்டு அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, குடும்ப தலைவர் அல்லது உறுப்பினர்கள் நேரில் வந்து தங்களது கைரேகையை பதிவு செய்து பொருள்களை வாங்கும் பயோமெட்ரிக் முறை அமல்படுத்தப்பட்டது.

ஆனால், பயோமெட்ரிக் முறையில் கைரேகை பதிவு செய்வதில் சிக்கல் ஏற்படுகிறது. வயதானவர்கள் ரேஷன் கடைகளுக்கு வரும்போது அவர்களது கைரேகைகள் சரியாக பதிவது இல்லை, எனவே, அவர்கள் பொருள்களை வாங்க முடியாத சூழல் ஏற்படுகிறது. கைரேகை பதிவை புதுப்பித்து வருமாறு ரேஷன் கடை ஊழியர்கள் அலைக்கழிக்கும் சம்பவங்களும் ஆங்காங்கே நடந்து வருகின்றன.

கைரேகை பதிவு இல்லாமல் பொருட்கள் வழங்கக்கூடாது என்று அதிகாரிகள் ஒருபக்கம் சொல்கிறார்கள். பலருக்கும் கைரேகை பதிவாதில்லை அதிகாரிகளிடம் சொன்னாலும், அதை பற்றி காதில் வாங்கி கொள்வதில்லை என்று ரேஷன் கடை ஊழியர்கள் சொல்கிறார்கள்.

இப்படி நடைமுறை சிக்கல்கள் இருந்தாலும், பொருட்களை மட்டும் தங்குதடையின்றி பொதுமக்களுக்கு வழங்கிட வேண்டும் என்பதில் அரசு உறுதியாக இருந்து வருகிறது.

இந்நிலையில், தமிழ்நாடு கூட்டுறவுத் துறை புதிதாக ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, ரேஷன் கடைகளில் கைவிரல் ரேகைப் பதிவு வேலை செய்யாவிட்டாலும்கூட பரவாயில்லை, பழைய முறைப்படி, அத்தியாவசிய பொருட்களை வினியோகம் செய்ய வேண்டும் என்று ரேஷன் கடை ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதேசமயம், குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வினியோகம் எந்த காரணத்திற்காகவும் தடைப்பட்டுவிடக்கூடாது என்றும் கூடுதலாக அறிவுறுத்தப்பட்டுள்ளதாம்.

Similar News