முதலிரவு முடிந்ததும் புதுமாப்பிள்ளை தப்பியோட்டம்.. மணப்பெண்ணின் நகை, மொய் பணம் அபேஸ் !!

முதலிரவு முடிந்ததும் புதுமாப்பிள்ளை தப்பியோட்டம்.. மணப்பெண்ணின் நகை, மொய் பணம் அபேஸ் !!

Update: 2022-02-03 16:34 GMT

முதலிரவு முடிந்ததும் மணப்பெண்ணின் நகை, மொய் பணத்துடன் மாப்பிள்ளை தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கேரள மாநிலம் அலப்புழா காயங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் அசாரூதீன். இவருக்கும் பத்தனம்திட்டா பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கும் பெற்றோர் முன்னிலையில் கடந்த 30ஆம் தேதி திருமணம் நடந்தது. திருமண நிகழ்ச்சிக்கு வந்த பெரும்பாலானோர் திரும்பிய நிலையில், நெருங்கிய உறவினர்கள் மட்டும் வீட்டில் தங்கியிருந்தனர்.

இந்த நிலையில், திருமணம் முடிந்த அன்று இரவு தம்பதி இருவருக்கும் முதலிரவு நடந்துள்ளது. முதலிரவில் மாப்பிள்ளை பெண்ணுடன் ஒன்றாக இருந்துள்ளார். இந்நிலையில் முதலிரவு முடிந்த பிறகு அதிகாலை 3 மணிக்கு திடீரென மாப்பிள்ளை அதிர்ச்சி அடைந்தார். அப்போது, புதுபெண்ணிடம் தனது நண்பருக்கு விபத்து ஏற்பட்டது. இதனால் உடனடியாக நான் உதவிக்கு செல்ல வேண்டும் என கூறிவிட்டு சென்றுள்ளார்.

இந்த விஷயத்தை கேள்விபட்ட பெண் வீட்டார் உடனடியாக அசாரூதினை தொடர்பு கொண்டனர். அப்பொழுதுஅவர் தான் அலப்புழா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இருப்பதாக, விரைவில் வீட்டிற்கு வருவதாகவும் கூறியுள்ளார். ஆனால் விடிந்து வெகுநேரமாகியும் அவர் வீட்டிற்கு வரவில்லை.

பெண் வீட்டார் அசாரூதீனை மீண்டும் தொடர்பு கொள்ள முயன்றபோது அவரது செல்போன் எண் அணைத்து வைக்கப்பட்டிருந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் வீட்டை சோதனை செய்த போது பெண்ணிற் வரதட்சனையாக வழங்கப்பட்டிருந்த 30 பவுன் நகை, திருமணத்திற்கு உறவினர்கள் மொய் பணமாக வழங்கிய ரூ2.75 லட்சம் பணம் ஆகியன மாயமாகியிருந்தது. இதையடுத்து பெண் வீட்டார் அதிர்ச்சியடைந்து தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து போலீசாருக்கு திருமணம் செய்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் அசாரூதீனிற்கு ஏற்கனவே இந்து மதத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் திருமணமாகியிருந்தது. தற்போது அவர் செய்தது 2ஆவது திருமணம் என்றும் பணத்திற்கு ஆசைப்பட்டே இரண்டாவது திருமணத்தை அவர் செய்ததும் தெரியவந்தது.

 
இதையடுத்து போலீசார் அவரது முதல் மனைவி வீட்டிற்கு சென்று சோதனை செய்த போது அசாரூதீன் அங்கு பதுங்கியிருந்தது தெரியவந்தது. அங்கு வைத்து அசாரூதீனை கைது செய்தனர். பணத்திற்கு ஆசைப்பட்டு இரண்டாவது திருமணம் செய்து முதலிரவில் உல்லாசம் அனுபவித்துவிட்டு நகை மற்றும் பணத்துடன் தப்பியோடியதாக அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

newstm.in

Similar News