நண்பரின் பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு சென்ற புதுமாப்பிள்ளை கொலை!!
நண்பரின் பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு சென்ற புதுமாப்பிள்ளை கொலை!!
திண்டுக்கல்லில் நண்பரின் பிறந்தநாள் விழாவுக்கு சென்ற புதுமாப்பிள்ளை படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அனுமந்த நகர் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் (26) என்பவருக்கும் தென்றல் என்ற பெண்ணுக்கும் கடந்த 15 நாட்களுக்கு முன்பு திருமணமானது. இந்நிலையில் சூர்யா என்ற நண்பரின் பிறந்தநாள் விழாவுக்கு பிரபாகரன் சென்றார்.
அப்போது சம்பவ இடத்திற்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம கும்பல் பிரபாகரனை குறிவைத்து சரமாரியாக வெட்டியது. அதைத் தடுக்க முயன்ற கார்த்திக் என்பவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.
மருத்துவமனையில் பிரபாகரனை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். படுகாயம் அடைந்த கார்த்திக்கிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனையடுத்து போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் ஏற்கெனவே கொலை வழக்கு நிலுவையிலுள்ள ராஜ்குமார்(19), ராஜேஸ்வரன்(20), ஸ்ரீதர்(21), ரஞ்சித்(21), ரண்குமார்(21) ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
மேலும் அவர்களிடமிருந்து கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்கள் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். குடிபோதையில் இருந்த நண்பர்களுக்கும், பிரபல ரவுடி பசுங்கிளி மகன் ராஜ்குமாருக்கும் இடையே ஏற்கெனவே இருந்த முன்விரோதம் இருந்துள்ளது.
இதன் காரணமாக மீண்டும் தகராறு ஏற்படவே ஆத்திரமடைந்த ராஜ்குமார் தரப்பினர் படுகொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
newstm.in