பஞ்சாப் முதலமைச்சருக்கு நாளை திருமணம்.. மனைவி யார் தெரியுமா?

பஞ்சாப் முதலமைச்சருக்கு நாளை திருமணம்.. மனைவி யார் தெரியுமா?

Update: 2022-07-06 17:23 GMT

பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி முதல்முறையாக சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. அங்கு முதலமைச்சராக அக்கட்சியின் மூத்த நிர்வாகிகளில் ஒருவரும் நடிகருமான பகவந்த் மான் சிங் பொறுப்பேற்றுக்கொண்டார். அதாவது பகவந்த் மான் பஞ்சாப் மாநிலத்தின் 17ஆவது முதல்வராக இந்தாண்டு பொறுப்பேற்றுக் கொண்டார். 

முதல்வராக பொறுப்பேற்றது முதல் பல்வேறு அதிரடி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் முதலமைச்சர் பகவந்த் மானின் (48) திருமணம் செய்யவுள்ளார். சண்டிகரில் உள்ள அவரது இல்லத்தில் எளிமையான முறையில் குர்ப்ரீத் கெளர் என்ற பெண்ணை அவர் நாளை திருமணம் செய்து கொள்ளவுள்ளார்.
 


இந்த திருமணத்துக்கு நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே பங்கேற்கவுள்ளனர். அதேநேரத்தில் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவாலுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், அவர் பங்கேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இதனிடையே, பகவந்த் மான் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு தனது முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதனையடுத்து தனியாக வசித்து வந்த பகவந்த் மான் தற்போது இரண்டாது திருமணத்துக்கு தயாராகியுள்ளார். அதன்படி குர்ப்ரீத் கெளர் என்ற பெண்ணை அவர் நாளை திருமணம் செய்து கொள்ளவுள்ளார்.

newstm.in
 

Tags:    

Similar News