வாக்காளர்களுக்கு க்யூஆர் கோட் டோக்கன்.. அதிமுக வட்டச் செயலாளரிடம் விசாரனை..!

வாக்காளர்களுக்கு க்யூஆர் கோட் டோக்கன்.. அதிமுக வட்டச் செயலாளரிடம் விசாரனை..!

Update: 2022-02-20 04:20 GMT

சென்னை மயிலாப்பூர் கேசவபுரம் தெற்கு கோவில் தெருவில், வீடு வீடாக டோக்கன் வழங்கப்படுவதாக 9-வது மண்டல தேர்தல் பறக்கும் படை அதிகாரி தேவகுமாரனுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, தேர்தல் பறக்கும் படை அதிகாரி மற்றும் மயிலாப்பூர் போலீசார், கேசவபுரம் தெற்கு கோவில் தெருவுக்கு சென்று கண்காணித்தனர்.

அப்போது, வீடு வீடாகச் சென்று டோக்கன் வழங்கிய அதிமுகவைச் சேர்ந்த 124-வது வட்டச் செயலாளர் தங்கதுரை என்பவரை மடக்கிப் பிடித்தனர்.

அவரிடம், வாக்களிக்கும் நபர்களுக்கு க்யூஆர் குறியீடு கொண்ட அதிமுக சின்னம் ஜெயலலிதா படம் அச்சடிக்கப்பட்ட கார்டுகள் இருந்தது. அதை பறிமுதல் செய்தனர்.

மேலும், அவர் வைத்திருந்த நோட்டு ஒன்றில் பல பெயர்கள் கையால் எழுதப்பட்ட துண்டுச்சீட்டு வைத்திருந்ததையும் பறிமுதல் செய்தனர். இதையடுத்து தங்கதுரையை மயிலாப்பூர் போலீசார் காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News