ரெப்போ வட்டி விகிதத்தை 0.40 சதவீதம் உயர்த்தி ரிசர்வ் வங்கி அறிவிப்பு..!!

ரெப்போ வட்டி விகிதத்தை 0.40 சதவீதம் உயர்த்தி ரிசர்வ் வங்கி அறிவிப்பு..!!

Update: 2022-05-05 04:55 GMT

ரெப்போ ரேட் என்று கூறப்படும் வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி அவ்வப்போது மாற்றியமைக்கப்படும் நிலையில், கடந்த சில மாதங்களாக மாற்றம் செய்யப்படாமல் 4 சதவிகிதமாக நீடித்து வந்தது.

இந்நிலையில், ரெப்போ வட்டி விகிதத்தை மேலும் 0.40 சதவிகிதம் உயர்த்தி ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கான வட்டி விகிதத்தை 4 சதவிகிதத்தில் இருந்து 4.40 சதவிகிதமாக உயர்த்துவதாக அறிவித்தார். வங்கிகள் ரிசர்வ் வங்கியில் வைத்திருக்கும் வைப்புத் தொகைக்கான வட்டி விகிதம் மாற்றமின்றி 3.35 சதவிகிதமாக உள்ளது.

வங்கிகள் ரிசர்வ் வங்கியில் வைக்க வேண்டிய ரொக்கக் கையிருப்பு விகிதத்தையும் 0.50 சதவீதம் அதிகரித்து 4.50 சதவிகிதமாக உயர்த்தியுள்ளதாகத் தெரிவித்தார். இந்த அறிவிப்பு உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளது.

உக்ரைன் போரின் விளைவாகப் பெட்ரோலியம், எரிவாயு, உலோகங்கள், உணவுப்பொருட்கள் ஆகியவற்றின் விலை உயர்ந்ததால் நாட்டில் பண வீக்கம் அதிகரித்துள்ளது. இதனால் கடன் வழங்கலைக் குறைத்துப் பண வீக்கத்தைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

Similar News