பிரெஞ்ச் ஒபனை கைப்பற்றி மீண்டும் மாஸ் காட்டிய ரபேல் நடால்!!

பிரெஞ்ச் ஒபனை கைப்பற்றி மீண்டும் மாஸ் காட்டிய ரபேல் நடால்!!

Update: 2022-06-06 07:43 GMT

களிமண் தரையின் ராஜா என்று அழைக்கப்படும் ரபேல் நடால் 14ஆவது முறையாக பிரெஞ்ச் ஓபனை கைப்பற்றி அசத்தியுள்ளார்.

இறுதிப் போட்டியில் நார்வே வீரரான 23 வயதான காஸ்பர் ரூட்டை 6-3, 6-3, 6-0 என்ற நேர்செட் கணக்கில் தோற்கடித்து, ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் தனது 14வது பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை வென்றார்.

இதுவரை மிக அதிக வயதில் பிரெஞ்ச் ஓபனை வென்றவர் என்ற பெருமை ஆண்ட்ரெஸ் கிமெனோ என்ற வீரர் பெற்றிருந்தார். அவர் 34 வயது 305 நாட்களில் பிரெஞ்ச் ஓபன்  வென்று சாதனை படைத்தார்.

தற்போது அந்த சாதனையை 36 வயதான ரபேல் நடால் முறியடித்துள்ளார். ஒரே சீசனில் ஆஸ்திரேலிய ஓபன் மற்றும் பிரெஞ்ச் ஓபன் பட்டங்களை நடால் கைப்பற்றுவது இதுவே முதல் முறைஇந்த பிரெஞ்சு ஓபனை வென்றதன் மூலம், நடால் வென்ற கிராண்ட்ஸ்லாம் பட்டங்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்தது.

இவருக்கு அடுத்த இடத்தில் தலா 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களுடன் ரோஜர் பெடரர் மற்றும் நோவக் ஜோகோவிச் சம நிலையில் உள்ளனர். கடந்த ஜனவரியில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் பெடரர் பட்டம் வென்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

newstm.in

Similar News