ரயில்வேயின் பார்சல் திட்டம்.. மக்களுக்காக தபால் துறையும் இணைந்தது !!

ரயில்வேயின் பார்சல் திட்டம்.. மக்களுக்காக தபால் துறையும் இணைந்தது !!

Update: 2022-04-07 09:00 GMT

இந்திய அஞ்சல் துறையும் மற்றும் இந்திய ரயில்வேயும் இணைந்து மேம்படுத்தப்பட்ட பார்சல் சேவை உருவாக்கப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் நாம் ஒரு பொருளை மற்றவர்களுக்கு அனுப்ப தனியார் பார்சல், கொரியர் சர்வீசை அனுகுகிறோம். ஆனால் இப்போது அரசே இத்திட்டத்தை எடுத்துச்செல்ல இருக்கிறது. அதுவும் இரண்டு பெரிய பொதுத்துறை நிறுவனங்கள் மூலம்.

பார்சலை வாங்கும் இடத்திலும், பார்சலை கொடுக்கும் இடத்திலும் அஞ்சல்துறை சேவை செய்யும். இந்த பார்சலை ரயில் நிலையங்களுக்கிடையே கொண்டு செல்லும் சேவையை ரயில்வே செய்யும். இந்த திட்டத்தின் நோக்கம் வணிகர்களிடமிருந்து வணிகர்களுக்கு மற்றும் வணிகர்களிடமிருந்து வாடிக்கையாளர்களுக்கு என்பதாகும். 

அதாவது அனுப்புகின்றவரின் இடத்தில் இருந்து, கொண்டுசென்று பெறுகின்றவரின் இடத்தில் அளிப்பதாகும். எனினும் தற்போது சோதனை அடிப்படையில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் முதல் சேவை 2022 மார்ச் 31ஆம் தேதி முதல் சூரத்- வாரணாசி இடையே நடைபெற்றது.

மக்களவையில் நேற்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் ரயில்வே, தகவல் தொடர்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இதனை தெரிவித்தார். இந்த திட்டம் நாடு முழுவதும் விரிவடைந்தால் சிறப்பாக இருக்கும் வெளிமாநிலங்களில் இருந்து பயணர்கள் ரயில் மூலம் பொருட்கள் விரைவாக வந்துசேரும் வகையில் தபால் நிலையத்தை நாடுவர்  என தெரிவிக்கின்றனர்.


newstm.in

Tags:    

Similar News