மீண்டும் மழை.. 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. சென்னை வானிலை ஆய்வு மையம் !

மீண்டும் மழை.. 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. சென்னை வானிலை ஆய்வு மையம் !

Update: 2022-02-27 20:35 GMT

தென் வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அடுத்த 48 பணி நேரத்திற்கு பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டி பதிவாகக்கூடும்.

தென் வங்ககடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக வருகிற மார்ச் 1ஆம் தேதி தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.  

அதேபோல் மார்ச் 2ஆம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும். தென்காசி, மதுரை, விருதுநகர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதேபோல் தென்கிழக்கு வங்க கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு அந்தமான் பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்திலும் இடை இடையே 60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். அதேபோல் வருகிற 1 மற்றும் 2ம் தேதிகளில் தென்கிழக்கு வங்க கடலோர பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்திலும் இடை இடையே 60  கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல  வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

newstm.in

Similar News