26ம் தேதி வரை இங்கெல்லாம் மழை.. சென்னை வானிலை மையம் தகவல்..!

26ம் தேதி வரை இங்கெல்லாம் மழை.. சென்னை வானிலை மையம் தகவல்..!

Update: 2022-05-24 05:50 GMT

‘தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 26-ம் தேதி வரை மழை நீடிக்கும்' என, சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

இது, மேலும் தொடர்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன. வெப்பச் சலனம் காரணமாக இன்று முதல் 26-ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டமாக காணப்படும். சில இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யும்.

மத்திய கிழக்கு வங்கக் கடல், அதை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் இன்று மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும்; அதனால், மீனவர்கள் இப்பகுதிக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.

நேற்று காலை நிலவரப்படி கோவை மாவட்டம் சின்கோனாவில் 11, சின்னக்கல்லாரில் 10, வால்பாறையில் 8 செ.மீ. மழை பதிவாகியுள்ளது’ என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Similar News