தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் மழை.. வானிலை மையம் எச்சரிக்கை

தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் மழை.. வானிலை மையம் எச்சரிக்கை

Update: 2022-02-19 07:46 GMT

தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

வடகிழக்கு பருவமழை குறைந்த நிலையில், தற்போது பனிப்பொழிவு நிலவி வருகிறது. எனினும் திருவாரூர் உள்ளிட்ட ஒருசில மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்தது. இந்த நிலையில் மழைதொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

அதன்படி, கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று (பிப்.19) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

பிப்.20: தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

பிப்.21: மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் (தென்காசி, தேனி, திண்டுக்கல், விருதுநகா், திருப்பூா், கோயம்புத்தூா், நீலகிரி) ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

பிப்.22: தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் (தென்காசி, தேனி, திண்டுக்கல், விருதுநகா், திருப்பூா், கோயம்புத்தூா், நீலகிரி) ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையைப் பொருத்தவரை சனிக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

    

newstm.in

Similar News