ராஜேந்திர பாலாஜி பண மோசடி புகாருக்கு ஆதாரங்கள் உள்ளது - தமிழ்நாடு அரசு !!
ராஜேந்திர பாலாஜி பண மோசடி புகாருக்கு ஆதாரங்கள் உள்ளது - தமிழ்நாடு அரசு !!
முந்தைய அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிராக, அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.3 கோடி மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த 5-ந் தேதி கர்நாடகாவில் வைத்து ராஜேந்திர பாலாஜியை தனிப்படை போலீசார் கைது செய்தனர். பின்னர், தமிழ்நாட்டுக்கு அழைத்து வரப்பட்டு ராஜேந்திர பாலாஜி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இது குறித்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், முன் ஜாமின் மனு நிலுவையில் உள்ள நிலையில் கைது ஏன்?, மதுரையை விடுத்து திருச்சி சிறையில் அடைத்தது ஏன்? என பல்வேறு கேள்விகளை எழுப்பி தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. மேலும் ராஜேந்திர பாலாஜிக்கு நிபந்தனை ஜாமினும் வழங்கினர்.
இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், மதுரை சிறையில் அடைத்தால், பார்வையாளர்கள் அதிகம் வருவார்கள், பாதுகாப்பு பிரச்சினைகள் எழும் என்பதால் திருச்சி சிறைக்கு மாற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பண மோசடி செய்ததற்க்கான அனைத்து ஆதாரங்களும் இருப்பதால், காவல்துறை விசாரணை நடத்தி வருவதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.