நெல்சனை தொடர்ந்து இந்த இளம் இயக்குநருடன் கைகோர்க்கும் ரஜினி!?

நெல்சனை தொடர்ந்து இந்த இளம் இயக்குநருடன் கைகோர்க்கும் ரஜினி!?

Update: 2022-02-20 18:45 GMT

நடிகர் ரஜினிகாந்த்தின் 169ஆவது படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ள நிலையில், அவரது 170ஆவது படத்தை இயக்குநரும் பாடலாசிரியருமான அருண்ராஜா காமராஜ் இயக்குவார் என்று தெரிகிறது.

அருண்ராஜா காமராஜ், தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் `நெஞ்சுக்கு நீதி' என்ற படத்தை இயக்கிவருகிறார். இந்தப் படம், ஆர்டிக்கிள் 15 என்ற இந்திப்படத்தின் ரீமேக். இதைத் தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த்துக்காக அருண்ராஜா காமராஜ் ஒரு கதை எழுதியுள்ளார்

அக்கதையை, தயாரிப்பாளர் போனி கபூர் - ராகுலிடம் கூறியிருக்கிறார். அவர்களுக்கு கதை பிடித்து போகவே, அவர்கள் நடிகர் ரஜினிகாந்திடம் நேரம் வாங்கி, போயஸ் கார்டனிலுள்ள அவரது வீட்டில் வைத்து அவரிடமும் கதை சொல்ல ஏற்பாடு செய்ததாக சொல்லப்படுகிறது.

கதை ரஜினிக்கு பிடித்துப்போனதால், அவர் படத்துக்கு ஓகே சொல்லி விட்டதாக செய்திகள் வெளியாகிவருகின்றன. போனி கபூர் - ராகுல் இணைந்து இப்படத்தை தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகிவருகிறது.

இதற்கு முன்னர் அருண்ராஜா காமராஜ் - ரஜினிகாந்த் கூட்டணியில் கபாலி, காலா, தர்பார் ஆகிய படங்களில் `நெருப்புடா’ `தங்க சிலை’ `கற்றவை பற்றவை’ `கண்ணுல திமிருஉள்ளிட்ட பாடல்கள் பல வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in

Similar News