ரஜினிகாந்த் மூளையில் இருந்த கட்டி மூக்கு வழியே அகற்றம்.. திருச்சி டாக்டர்கள் சாதனை..!
ரஜினிகாந்த் மூளையில் இருந்த கட்டி மூக்கு வழியே அகற்றம்.. திருச்சி டாக்டர்கள் சாதனை..!
மூளைப் பகுதியில் இருந்த கட்டியை வெளிப்புற காயமின்றி மூக்கின் வழியாக அறுவை சிகிச்சை செய்து திருச்சி அரசு மருத்துவமனை டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.
கரூர் மாவட்டம் வேப்பங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ரஜினிகாந்த் (38). கடந்த ஒரு வருட காலமாக தலைவலியால் அவதிப்பட்டு வந்த இவர், திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மூளையின் பிட்யூட்டரி பகுதியில் கட்டி இருப்பதை கண்டறிந்தனர்.
இதையடுத்து, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ், திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் குழு, ரஜினிகாந்தின் மூக்கின் வழியாக மூளையின் பிட்டியூட்டரி பகுதியில் இருந்த கட்டியை வெளிப்புற காயமின்றி அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர்.
திருச்சி அரசு மருத்துவமனையில் இந்த அறுவை சிகிச்சை செய்யப்படுவது இதுவே முதல் முறை. அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட ரஜினிகாந்த் இன்று பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.