#BREAKING:- ராமநாதபுரம் மன்னர் மாரடைப்பால் திடீர் மரணம்..!

#BREAKING:- ராமநாதபுரம் மன்னர் மாரடைப்பால் திடீர் மரணம்..!

Update: 2022-05-24 16:06 GMT

ராமநாதபுரம் சமஸ்தானத்தின் இளைய மன்னரும், ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில் தக்காருமான குமரன் சேதுபதி மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 56.

ராமநாதபுரம் சமஸ்தான இளைய மன்னர் என்.குமரன் சேதுபதி. இவர் ராமநாதபுரத்தில் உள்ள கோவில்கள் மற்றும் கல்வி நிறுவனங்களை நிர்வகித்து வந்தார். மதுரை தமிழ் சங்கத்தின் தலைவராக இருந்தார். இவருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மன்னர் குமரன் சேதுபதி காலமானார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராமநாதபுரம் ராமவிலாசில் வைக்கப்பட்டுள்ளது.

முக்கிய பிரமுகர்கள், அரசியல் கட்சி நிர்வாகிகள், தொழிலதிபர்கள், வியாபாரிகள், வழக்கறிஞர்கள் உட்பட ஏராளமானோர் மாலை வைத்து மரியாதை செலுத்தினர்.

மேலும் அவரது உடல் நாளை மாலை 3 மணிக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News