வீட்டில் தனியா இருந்த இளம்பெண் கற்பழிப்பு.. பெண்ணை வன்கொடுமை செய்த அண்ணன், தம்பி கைது!!

வீட்டில் தனியா இருந்த இளம்பெண் கற்பழிப்பு.. பெண்ணை வன்கொடுமை செய்த அண்ணன், தம்பி கைது!!

Update: 2022-05-18 21:49 GMT

மும்மை தாராவி பகுதியில் நிலேஷ் அனில் சோஹன் மற்றும் அவரது சகோதரர் அனில் சோஹன் வசித்து வந்துள்ளனர். இவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த இடத்தில் இருந்து வில்-பார்லே பகுதிக்கு தங்களது குடும்பத்தோடு குடியேறினர்.

இந்த நிலையில் கடந்த வாரம் தாராவி பகுதியில் உள்ள தங்கள் நண்பர்களை பார்க்க இரு சகோதரர்கள் வந்துள்ளனர். அப்போது தாராவி பகுதியில் புதிதாக குடிவந்த வந்த 20 வயது இளம்பெண்ணிடம் நட்பாக பழகி உள்ளனர்.

இதனையடுத்து அந்த பெண் வீட்டிற்கு சென்றவர்கள், வீட்டில் யாரும் இல்லை என்பதை தெரிந்து கொண்டு, தனியாக இருந்த அந்த இளம்பெண்ணிடம் சகோதரர்கள் இருவரும் தவறாக நடக்க முயற்சித்துள்ளனர். இதனால் அந்த பெண் கத்தியுள்ளார். இதையடுத்து கத்தியை காட்டி மிரட்டியவர்கள் அந்த பெண்ணை கற்பழித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து அந்த பெண்ணை நிர்வாணமாக படம் பிடித்த சகோதரர்கள் இந்த விஷயம் வெளியே தெரிந்தால் சமூக வலைதளத்தில் வீடியோவை வெளியிட்டு விடுவோம் என மிரட்டி உள்ளனர். இருப்பினும் அந்த இளம்பெண் நடந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில், தாராவி பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட் சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதனைத்தொடரந்து அந்த பகுதியில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்திய போலீசார், கற்பழிப்பு குற்றவாளிகளான அனில் சோஹன் மற்றும் அவரது சகோதரர் நிலேஷ் ஆகியோரை அவரது வீட்டில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News