ஏலத்திற்கு வருகிறது அரியவகை நீல வைரம்.. ஆரம்ப விலை எத்தனை கோடி தெரியுமா !!

ஏலத்திற்கு வருகிறது அரியவகை நீல வைரம்.. ஆரம்ப விலை எத்தனை கோடி தெரியுமா !!

Update: 2022-02-21 17:00 GMT

உலகின் மிக அதிக மதிப்புடைய நீல வைரம் ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி ஹாங்காங்கில் ஏலத்திற்கு வரவுள்ளது.

வைரங்களிலேயே அரிய வகை வைரம் நீல வைரமாகும். இப்படிப்பட்ட நீல வைரலம் ஹாங்காங்கில் உள்ள ஃபைன் ஆர்ட்ஸ் நிறுவனத்தில் சோதஃபி என்ற நிறுவனம் சார்பில் ஏலத்திற்கு கொண்டு வரப்படவுள்ளது. வரும் ஏப்ரல் மாதம் இது ஏலமிட திட்டமிடப்பட்டுள்ளது.  

De Beers Cullinan Blue என அழைக்கப்படும் இந்த வைரம் கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தென்னாப்ரிக்காவில் உள்ள கல்லினன் மைன் என்ற இடத்தில் வெட்டியெடுக்கப்பட்டுள்ளது. உலகின் மிக அரியவகை வைரமான இது தற்போது சாத்பை என்ற நிறுவனத்திற்கு சொந்தமாக உள்ளது.

40 காரட் மதிப்பில் இருந்த இந்த வைரக்கல், நிபுணர்களால் ஓராண்டாக பட்டை தீட்டப்பட்டு 15 காரட்டில் நீல நிற வைரமாக்கப்பட்டது. இந்த வைரம் 350 கோடி ரூபாய் ஏலத்திற்கு போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்த வைரம் 15.10 கேரட் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை 10 கேரட்டிற்குள் குறைவான வைரங்களே அதிகம் ஏலமிடப்பட்டுள்ளன. மிக அரிதாக 10 கேரட்டிற்கும் அதிமான வைரங்கள் ஏலமிடப்பட்டுள்ளன.

இதனால் இந்த வைர ஏலம் சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது. 


newstm.in

Tags:    

Similar News