ரத்ததான செயலி, சமூக வலைதள பக்கங்கள் தொடக்கம்.. விஜய் மக்கள் இயக்கம் அதிரடி !!

ரத்ததான செயலி, சமூக வலைதள பக்கங்கள் தொடக்கம்.. விஜய் மக்கள் இயக்கம் அதிரடி !!

Update: 2022-07-06 20:10 GMT

நடிகர் விஜயின் மக்கள் இயக்கம் சார்பில் ரத்த தான செயலி மற்றும் சமூக வலைதள பக்கங்கள் தொடங்கப்பட்டுள்ளன. 

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளார் விஜய். இவர் விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பை தொடங்கி மக்களுக்கு நற்பணி செய்து வருகிறார். அதேநேரத்தில் இந்த அமைப்பு விரைவில் அரசியல் அமைப்பாக மாறும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டுள்ளனர். 

அதற்கு முன்னோட்டமாக, நடிகர் விஜயின் ரசிகர்களை ஒருங்கிணைக்கும் அமைப்பு விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. வரும் காலத்தில் நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் இந்த அமைப்பில் உள்ள நிர்வாகிகள் கட்சி நிர்வாகிகளாக மாறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் விஜய் மக்கள் இயக்கம் தமிழகத்தில் 180 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு இருக்கின்றனர். அவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் சென்னை அருகில் உள்ள பனையூரில் நடைபெற்றது. புஸ்ஸி ஆனந்த் தலைனையில் நடைபெற்ற அந்த கூட்டத்தில் சில முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசித்துள்ளனர்.  

அத்துடன் விஜய் மக்கள் இயக்கத்திற்கு என தனி சமூக வலைதள பகுதிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. மேலும் ரத்த தானத்தை ஊக்க வைக்கும் வகையில் தனியாக ரத்ததான செயலி ஒன்றையும் அறிமுகம் செய்துள்ளனர். இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

newstm.in
 

Similar News