ரேஷன் கடை நேரம் மாற்றம்.. உங்கள் பகுதியில் எப்போ கடை திறக்கும் தெரியுமா..?

ரேஷன் கடை நேரம் மாற்றம்.. உங்கள் பகுதியில் எப்போ கடை திறக்கும் தெரியுமா..?

Update: 2022-03-01 13:45 GMT

பெரும்பாலான ரேஷன் கடைகளின் ஊழியர்கள் குறித்த நேரத்தில் கடைகளை திறப்பதில்லை என்றும், சீக்கிரமே மூடி விடுகின்றனர் என்றும், சில நாள் திறப்பதே இல்லை என்றும் அரசுக்கு ஏராளமான புகார்கள் வந்தன.

இதனை அடுத்து தற்போது ரேசன் கடைகள் செயல்படும் புதிய நேரம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த நேரத்தை சரியாக பின்பற்றாத ரேஷன் கடை ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலை 8.30 மணி முதல் 12.30 மணி வரையும், பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணி வரையும் ரேஷன் கடைகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற பகுதிகளில் காலை 9 மணி முதல் 1 மணி வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் 6 மணி வரையிலும் ரேசன் கடைகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரேஷன் கடைகள் செயல்படும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டதை அடுத்து இந்த நேரங்களி கண்டிப்பாக பின்பற்ற வேண்டுமென தமிழக அரசின் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அறிவிப்பு செய்துள்ளது.

Similar News