ரவிச்சந்திரன் அஷ்வினுக்கு கொரோனா தொற்று!!

ரவிச்சந்திரன் அஷ்வினுக்கு கொரோனா தொற்று!!

Update: 2022-06-21 08:55 GMT

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வினுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் இங்கிலாந்துக்கு எதிராக ஜூலை 1ஆம் தேதி நடைபெறும் 5வது டெஸ்ட் போட்டிக்காக அவர் செல்லவில்லை என்று பிசிசிஐ வட்டாரம் தெரிவித்துள்ளதுஅஸ்வின் இப்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

அனைத்து நடைமுறைகளும், விதிமுறைகளும் கடைப்பிடிக்கப்பட்ட பிறகே அஷ்வின் இந்திய அணியுடன் இணைவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அணி ஏற்கெனவே இங்கிலாந்துக்கு சென்று விட்டது.

அஸ்வின் புறப்படுவதற்கு முன்பு கோவிட் 19 பாசிட்டிவ் ஆனதால் இங்கிலாந்துக்கு இந்திய அணியுடன் பயணம் செய்யவில்லை. ஆனால், ஜூலை 1ஆம் தேதி டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன்பு அவர் குணமடைவார் என்று நம்புவதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முந்தைய நாள், கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மான் கில் வலைப்பயிற்சியில் ஈடுபட்ட வீடியோவைப் பகிர்ந்துள்ளது. லீசெஸ்டர்ஷைர் கவுண்டி மைதானத்தில் இருவரும் ஆடியதால் டெஸ்ட்டிலும் இந்த ஜோடி இந்தியாவுக்கான இன்னிங்ஸைத் தொடங்க வாய்ப்புள்ளது.

இந்திய அணி ஜூன் 24 முதல் லீசெஸ்டர்ஷையருடன் நான்கு நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. வெளிநாடுகளில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோஹித் அணியை வழிநடத்துவது இதுவே முதல் முறை.

newstm.in

Similar News