ரவிச்சந்திரனுக்கு 5 வது முறையாக சிறை விடுப்பு..!
ரவிச்சந்திரனுக்கு 5 வது முறையாக சிறை விடுப்பு..!
தமிழகத்தில் திமுக தலைமையிலான ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், ராஜீவ் கொலை வழக்கு கைதிகளுக்கு பரோல் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பேரறிவாளன், ரவிச்சந்திரன், நளினி ஆகியோர் பரோலில் வெளியே உள்ளனர். இதற்கிடையில், பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், ரவிச்சந்திரனின் சிறை விடுப்பை ஐந்தாவது முறையாக நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ரவிச்சந்திரனின் தாயார் ராஜேஸ்வரி உடல்நலம் பாதிப்பு காரணமாக, அவர் உடனிருந்து கவனித்துக் கொள்ளும் வகையில் மேலும் 30 நாட்கள் கூடுதலாக சிறை விடுப்பு கோரிய நிலையில், அவரது விடுப்பு 5வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து, ரவிச்சந்திரன் அடுத்த மாதம் 16-ம் தேதி மதுரை மத்திய சிறையில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.