பிளஸ் 1 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு தேதி அறிவிப்பு!!

பிளஸ் 1 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு தேதி அறிவிப்பு!!

Update: 2022-04-01 10:12 GMT

பிளஸ் 1 மாணவர்களுக்கு, பொதுத் தேர்வுக்கான செய்முறை தேர்வுகளை நடத்த, அரசு தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.

புதிய பாடத் திட்டத்தின்படி, பிளஸ் 1 மாணவர்களுக்குஏப்ரல்  25ஆம் தேதி முதல் செய்முறை தேர்வுகள் நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை மே 2க்குள் முடிக்க வேண்டும்.

உயிரியல் பாடத்துக்கு, உயிரி தாவரவியல், உயிரி விலங்கியல் என, தனித்தனியாக செய்முறை தேர்வு நடத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

மதிப்பெண் பட்டியலை, மே 4க்குள் தலைமை ஆசிரியர்கள் தயாரிக்க வேண்டும். மே 14க்குள், மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குனரிடம், அவற்றை ஒப்படைக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டது. பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு ஏப்ரல் 25 முதல் மே 2ம் தேதி வரை நடைபெறும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்து இருந்தது.

 இந்நிலையில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

Similar News